தனியார் வங்கிகளுக்கு பூட்டு – மீள திறக்கப்படும் திகதியும் அறிவிப்பு

இலங்கையிலுள்ள தனியார் வங்கிகள் இன்று முதல் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவித்தலை குறித்த வங்கிகள் விடுத்துள்ளன. அத்துடன், ஒன்லைன் ஊடாக வங்கி சேவையை முன்னெடுக்கலாம் எனவும் அறிவித்துள்ளன.

பயணக்கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவலுடனான தற்போதைய சூழ்நிலையைக்கருத்திற்கொண்டே தனியார் வங்கிகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இதன்படி ஜுன் 7 முதல் ஜுன் 17 வரை தமது வங்கி மூடப்பட்டிருக்கும் என அமானா வங்கி அறிவித்துள்ளது.

ஜுன் 13 வரை யூனியன் வங்கியும், ஜுன் 12வரை நேஷன் ட்ரஸ்ட் வங்கியும், ஜுன் 8வரை ஹட்டன் நஷனல் வங்கியும், ஜுன் 11 வரை என்.டி.பி. வங்கியும், ஜுன் 13 வரை கொமர்ஷல் வங்கியும், ஜுன் 11 வரை சம்பத் வங்கியும் மூடப்பட்டிருக்கும். அத்துடன், ஒன்லைன் ஊடாக சேவையை முன்னெடுக்குமாறு செலான் வங்கியும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles