மொட்டு கட்சி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்துவிலகி, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே கூட்டணி மலரக்கூடும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.










