2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும்.
மேற்படி நாள்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.










