தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் சாத்தியம்!

இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியவை வருமாறு,

” அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலானது மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கையில் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்றே அரசியல் கள நிலைவரம் தெரிவிக்கின்றது.

எனினும், தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் அஞ்சுகின்றது. ஏனெனில் உள்ளாட்சிசபைத் தேர்தலில் அதன் வாக்கு வங்கி சரிந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆணை யாருக்கு என்பது தெரியவரும்.” – என்றார் சஞ்ஜீவ எதிரிமான்ன.

Related Articles

Latest Articles