இந்திய தமிழ் நாட்டு அரசாங்கத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் ஒரு தொகுதி அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவி தூதுவர் டாக்டர்.எஸ்.அதிரா கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார்.இதன்போது நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட கொத்மலை பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


கோத்மலை பிரதேசத்தில் வசிக்கின்ற கிராமப்புறங்களைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கும் பெருந்தோட்ட பகுதியில் குறைந்த வருமானங்களை பெறுகின்ற 34012 குடும்பங்களுக்குமே இந்த நிவாரண பொருடட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரண பொருட்களில் 10 கிலோ கிராம் அரிசியும் பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் ஜந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கான பால்மாவும் வழங்கப்பட்டது.
