‘தமிழக் கூட்டமைப்பின் பிரிவினைவாத பொறிக்குள் சிக்க வேண்டாம்’

” பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிக்கக்கூடாது.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது மிகவும் பாரதூரமான கோரிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன.

படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்ட புலிகளை விடுவிக்க கோருகின்றனர், விசேட நீதியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து ஈழம் என்ற இலக்கை அடைவதற்கே தமிழ் பிரிவினைவாதிகள் முற்படுகின்றனர்.

நாட்டை மீட்க 30 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்யப்பட்டது. பலர் அங்கவீனமாகியுள்ளனர். எனவே, புலிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நிலைக்கு அரசு வந்துள்ளமை தவறான விடயமாகும்.

எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி ஈழம் என்ற இலக்கை நோக்கி நகர கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இந்த பொறிக்குள் ஜனாதிபதி சிக்க கூடாது. ” – என்றார்.

Related Articles

Latest Articles