தமிழரசு இன்று வேட்புமனு தாக்கல்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதேவேளை, வன்னி, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இறுதியாகிவிட்டது என்றும், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு இன்னமும் நிறைவுறவில்லை என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles