“ நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்
நேற்று முன்தினம் ஜெனிவாவில் ஆரம்பமானது.
அன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப்பும், அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.
இந்தநிலையில், இந்தியா சார்பில் பேரவையில் மணி பாண்டே உரையாற்றுகையில்,
“அயல்நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் நிவாரணம், புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றை முன்னிறுத்திய இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்திருக்கின்றது.
அதுமாத்திரமன்றி இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்குச் சுமார் 4 பில்லியன் டொலருக்கும்மேற்பட்ட பெறுமதியுடைய உதவிகளை இந்தியா வழங்கியிருக்கின்றது.
இந்தியா எப்போதும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளின் பிரகாரமேசெயற்பட்டு வருகின்றது. நீதி, சமத்துவம், கௌரவம், சமாதானத்துக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவையே அவையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்
கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசு பூர்த்தி செய்யும்
என்றும், அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல் மற்றும்
மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றும்
என்றும் எதிர்பார்க்கின்றோம்.
தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை அரசு வழங்கியிருக்கும்
உத்தரவாதத்தைக் கவனத்தில்கொள்ளும் அதேவேளை, அடையப்பட்டுள்ள
முன்னேற்றங்கள் போதுமானவையாக இல்லை. ஆகவே, அனைத்துப்
பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்
படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான தமது கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு
இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கின் றோம்.” – என்றார










