தமிழர்களுக்கு தீர்வை திணிக்க முடியாது!

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை பலவந்தமாக திணிக்க முடியாது.எனவே, மக்களிடம் கருத்துகோரலும் அவசியம். புதிய அரசமைப்பு ஊடாக அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற்றால் இப்பணியை முன்னெடுப்பது இலகுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

“ தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு காணப்படும். அவ்வாறு தீர்வு காணும்வரை மாகாணசபை முறைமை தொடரும். தேர்தலும் நடத்தப்படும். புதிய அரசமைப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். ஒரு கட்சியால் இதனை செய்ய முடியாது. அனைத்து கட்சிகளின் ஆதரவு அவசியம்.” – எனவும் ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

“இதுதான் தீர்வு என தமிழ் பேசும் மக்களுக்கு அதனை திணிக்க முடியாது. எனவே, மக்களுடனும் கலந்துரையாட வேண்டும். தீர்வு காணும் கால எல்லை எவ்வாறு அமையும் என்பது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையிலேயே தங்கியுள்ளது. பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் நல்லது. அதற்கான சாத்தியம் தற்போது நிலவுகின்றது.

அதேபோல அடுத்த தேர்தலில் சம்பிரதாயக் கட்சிகளுக்கு உரிய இடம் கிடைக்காது. நாடாளுமன்ற வியூகம்கூட மாறலாம். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டாவிட்டால்கூட பொருத்தமான தரப்புகளின் ஆதரவைப் பெறலாம்.” – எனவும் ஹரினி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles