தமிழ் திரையுலகில் தற்போதெல்லாம் ஒரு திரைப்படம் 25 நாட்களை கடந்துவிட்டாளே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடைசியாக தமிழ் சினிமாவில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்றால், அது தனுஷின் அசுரன் திரைப்படம் தான்.
இப்படியொரு நிலையில், தமிழ் சினிமா இருக்க, முன்னணி நட்சத்திரம் நடித்த படம் ஒன்று தொடர்ந்து 1000 நாட்களை கடந்து ஓடியுள்ளது.
ஆம், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் தான், தொடர்ந்து மூன்று வருடங்கள் திரையரங்கில் ஓடிய ஒரே திரைப்படம் என்று கருதப்படுகிறது.
பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் தமிழ் சினிமா காணாத வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இப்படத்தை இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால், TRP எங்கேயோ செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.










