தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் – சரத் வீரசேகர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சரத் வீரசேகர,

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அல்ல, புதிய அரசமைப்பை இயற்றுவதற்காகவே நாட்டு மக்கள் ஆணை வழங்கினர். அந்தவகையில் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அது பற்றியே கலந்துரையாடப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் சந்திப்பை கோருகின்றனர். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அவர்கள் அல்லர். வடக்கில்கூட அவர்களுக்கு 35 சதவீத வாக்குகளே உள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களின் நிலைப்பாடு அல்ல.” – எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles