ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அவரை வெற்றிபெற வைக்க முடியுமெனில் தமிழ்பேசும் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரால் வெற்றிபெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறபோகும் வேட்பாளர் ஒருவரின் வாக்குகளை குறைப்பதற்கான நகர்வாகவே இந்த தமிழ் பொதுவேட்பாளர் விடயம் அமைந்துள்ளது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அந்தவகையில் தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நான் ஆதரிக்கவில்லை.
பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேரம் பேசலாம். அது விடயத்தில் ஒன்றிணைந்து பயணிக்கலாம்.” – என்றார்.
