“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எமது தோழமையை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள். நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கு கிடைக்கப்பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்தைவிடவும் வடக்கில் இரு தேர்தல் மாவட்டங்களையும் வென்று தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றது பெரும் பலமாகும். அந்த நம்பிக்கையை நிச்சயம் நாம் பாதுகாப்போம்.
நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை எதிர்பார்க்கவில்லை. எனினும், மக்கள் வழங்கிவிட்டனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல், மக்கள் வழங்கிய பொறுப்பை நிச்சயம் முறையாக நிறைவேற்றுவோம். மக்கள் வழங்கிய ஆணை மகிழ்;ச்சியாக உள்ளது.” – என்றார்.










