தமிழ் மக்களுடன் கனடா இணைந்து பயணிக்கும் – தூதுவர் உறுதி

தமிழ் மக்களுடன் கனடா என்றும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றது என்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று கனேடியத் தூதுவரைக் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு கூறினார் என்று சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத் தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற் றிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலை வராகத் தெரிவு செய்யப்பட்டமைக்காகச் சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரி வித்த கனேடியத் தூதுவர், தமிழர்களின் அரசியல் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்க தயாராக உள்ளார் என்றும் உறுதியளித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles