தமிழ்க் கூட்டமைப்பின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பிற்போடப்பட்டுள்ளது என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்குழுவினர், அடுத்த வாரம் டில்லி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி உட்பட உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்கவிருந்தனர்.

எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் இவ்விஜயத்தை பிற்போடுமாறு கூட்டமைப்பு தரப்பில், இந்திய தூதுரகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாத இறுதியில் கூட்டமைப்பினர் டில்லி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles