தமிழ்,முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கே

“ ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் எல்லாம் தேவையில்லை, தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முஸ்லிம் எம்.பிக்களும் ரணில் பக்கமே நிற்பார்கள்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனினும், இவ்வேலைத்திட்டத்தை குழப்பும் முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டுவருகின்றன.

இந்நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் ரணில் பக்கமே உள்ளனர்.

தமிழ் பொதுவேட்பாளர் அவசியமில்லை என தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று சிவி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவர் ஓய்வுபெற்ற நீதியரசர். நாட்டை எவரால் முன்னெடுக்க முடியும் என்பது அவருக்கு தெரியும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் அவர்தான்.” -என்றார்.

Related Articles

Latest Articles