திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 85 ஆம் கட்டைப் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர், தம்பதியினரைக் கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.
கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு கின்றார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணிய ளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர, 85 ஆம் கட்டைப் பகுதியில் மதுபோதையில் ஒருவர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தவேளை மேற்படி நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறினர். இதனால் கோபமடைந்த மேற்படி நபர் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கணவன் மற்றும் மனைவியைக் கோடரியால் தாக்கினார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரு வரும் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்தார். கணவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
அக்போபுர, 85 ஆம் கட்டைப் பகுதி யைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (வயது 44) என்ற பெண்ணே உயி ரிழந்தார். கோடரியால் தாக்கினார் எனக் கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம். விக்ரமசிங்க (வயது 54) என்ற சந்தேகநபரைக் கைது செய்த அக்போபுர பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.










