தரமற்ற படகுபாதைக்கு அனுமதி வழங்கியது யார்? விசாரணை கோரும் ஹக்கீம்

” வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே இந்த தரமற்ற தற்காலிக படகு பாதை இயங்கியுள்ளது. இது தொடர்பில் உடனடி விசாரணை வேண்டும்.”- என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

” புதிய பாலம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. அதேபோல தற்காலிக படகுபாதையை நிறுவி, கட்டணமற்ற சேவையை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் அடுத்தமாதம் இடம்பெற இருந்தது.

இந்த படகுப்பாதைக்கு அனுமதி இல்லை. வீதி அபிவிருத்தி சபையின் அனுமதியின்றி தரமற்றதை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையே விபத்துக்கு காரணம். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles