தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட விபத்து…..!

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா, கொஸ்காவத்தை எனுமிடத்தில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தற்போது நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது.

பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயாவை நோக்கி கொஸ்காவத்தை பகுதியில் வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு வழிவிட ஒதுங்கிய போது, கல் ஒன்றின் இடுக்கில் இறுகிகொண்ட நிலையில் இவ் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

மாற்று வீதி இல்லாத காரணமாக இவ் வீதியின் உடாக தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா பகுதிக்கும்,பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கும் பயணிக்கும் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இடுக்கில் இறுகி கொண்ட ஆட்டோவை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆட்டோ பகுதியளவு சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

அரை மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது. தற்போது நிலைமை சீராகியுள்ளது. பூண்டுலோயா பகுதியில் கடும் மழை பெய்துவருகின்றது.

தலவாக்கலை நிருபர் – கௌசல்யா

Related Articles

Latest Articles