தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில் 4 இளைஞர்கள் கைது!

தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸ் பிரிவுகளில் போதை பொருட்கள் சகிதம் நான்கு இளைஞர்கள் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பகுதியில் 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிருட் பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லிந்துரை பொலிஸாராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நமது நிருபர் – கௌசல்யா

Related Articles

Latest Articles