தாய்வீடு திரும்பும் பெரும் புள்ளிகள் – களைகட்டுகிறது சிறிகொத்த!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க, நுவா கட்சியின் தலைவர் அசாத் சாலி,  முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்ன கோன் ஆகியோரே இவ்வாறான நகர்வில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி பலமாக இருந்தபோது இவர்கள் முன்னணி செயறபாட்டாளர்களாக இருந்தனர்.

தேசிய அரசொன்றை அமைக்க முன்வருமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு வந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பலர் பேச ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles