திருகோணமலை, அம்பாறையில் வீட்டு சின்னத்தில் களமிறங்க தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு

திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், நானும் சிறிதரனும் யாழில் போட்டியிடுவோம். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கு அழைப்பு விடுகின்றோம் என தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (05.10) இடம்பெற்றது. இதன்பின் ஊடக்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய குழுவால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர் தெரிவுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 11 பேர் அதில் கலந்து கொண்டோம். இதன்போது, வேட்பாளர் நியமனம் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடினோம். எந்தவொரு மாவட்டத்தினதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதனால் தெரிவிக்குழுக் கூட்டம் தொடர்ந்தும் நாளையும் (06.10) இடம்பெறும். அதன் பின்னரே முடிவு வெளியிடப்படும்.

விசேடமாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. குறித்த மாவட்டங்களில் ஒரு தமிழ் பிரதிநித்துவமேம வரக்கூடிய நிலமை இருக்கிறது. கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் நாம் தமிழ் பிரதிநித்துவத்தை இழக்க நேரிட்டது. பல கட்சிகளும் போட்டியிட்டால் திருகோணமலையிலும் இம்முறை அதுவே நிகழும்.இதனால் அந்த இரு மாவட்களில் தமிழ் பிரதிதிநித்துவத்தை தக்க வைப்பதற்காக ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திருகோணமலை ஆயர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருடன் இன்று (05.10) மாலை 4.30 இற்கு சந்திப்பு ஒன்று உள்ளது. அவரை சந்தித்து பேச ஒரு குழு திருகோணமலை செல்கின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் வீட்டுச் சின்னத்திலும் ஏனைய கட்சி வேட்பாளர்களையும் இணைத்து போட்டியிடமுடியும். இது தொடர்பாக அவதானம் செலுத்தி வருகின்றோம்.

அடுத்து, இம்முறை மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். இளையவர்கள், புதியவர்களை விரும்புகிறார்கள். எமக்கு கிடைத்த வேட்பாளர் பட்டியல்களில் பெண்களின் பெயர் குறைவாக உள்ளது. எமக்கு ஆர்வமுள்ள, திறமையான, செயறட்பாட்டு திறன் கொண்ட, எம்மோடு இணைந்து பயணிக்கக் கூடிய பெண்கள் தேவையாகவுள்ளது. நாம் அவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்க தயாரகவுள்ள போதும் பெண்கள் பலரும் முன்வரவில்லை. பெண்கள் அமைப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் வழ்குவதில்லை என மத்திய குழு எடுத்த தீர்மானத்தை எமது தெரிவுக் குழுவும் உறுதி செய்துள்ளது. எனவே அவர்களை தவிர்த்து புதிய வேட்பாளர்களையும், இளைஞர்களையும் களமிக்கவுள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் மத்திய குழு எடுத்த தீர்மானத்தை மீறி சிறிதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என தீர்மானம் எடுக்கப்பட்டதால் சிறிநேசன் போட்டியிட முடியாது.

சிறிதரன்மத்திய குழுக் கூட்ட தீர்மானத்தை மீறி செயற்பட்டதால் அவரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது அல்லது அவராக விலகியிருக்க வேண்டும் என நான் கோரினேன். இதை மறுத்து தானும் போட்டியிடப் போவதாக சிறிதரன் தெரிவித்தார்.

இந்நிலையில் தெரிவுக் குழுவும் நாங்கள் இருவரும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அமைவாக நானும், சிறிதரனும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவோம். நிச்சயமாக வெல்வோம். ஏனைய 7 பேரையும் இளைஞர்களாக களமிறக்குவோம் எனத் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles