இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மீளமைக்கப்பட்ட வரைபை இலங்கைத் தமிழரசுக்கட்சி நிராகரித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போதே திருத்தப்பட்ட வரைபை நிராகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நேற்று நேரில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் முடிவு ஏனைய கட்சிகளுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளை, தமிழரசுக்கட்சி இன்றி, ஏனைய தரப்புகள் இதில் கையொப்பமிடுவது பற்றியும் தற்போது பரீசிலிக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பில் ஏனையக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராயவுள்ளனர்.
