திஸ்ஸ குட்டியாராச்சி மனநலம் பாதிக்கப்பட்டவரா?

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார்.

திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகின்றது என சுட்டிக்காட்டியே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.

உங்களின் இந்த கோரிக்கை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என சபைக்கு அப்போது தலைமைத்தாங்கிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

Related Articles

Latest Articles