ஆர்பிகோ கம்பனியின்கீழ் இயங்கும், சாமிமலை, மல்லியப்பு டீசைட் ஆகிய இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் நானூறு தோட்ட தொழிலாளர்கள் இன்று (18) காலை தோட்ட பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலார்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் உடன்பட்டிருந்தன. இது தொடர்பில் அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
எனினும், மேற்படி கம்பனியானது, வேலை நாட்களுக்கு அமையவே முற்பணம் வழங்க முயற்சித்துள்ளது. இதனை ஆட்சேபித்தும், தமக்கு 15 ஆயிரம் ரூபா வேண்டும் என வலியுறுத்தியுமே தொழிலாளர்கள், வீதியில் இறங்கியுள்ளனர்.
