‘துணிந்து வாருங்கள் நிமிர்ந்து செல்வோம்’ – தயாசிறிக்கு வெல்கம அழைப்பு

” அமைச்சு பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல், அரசியிலிருந்து நெஞ்சை நிமிர்த்தியபடி  துணிகரமாக வெளியேறுங்கள். உங்களை பொறுப்பேற்க நாங்கள் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குமார வெல்கம,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் எனது சிறந்த நண்பர். ஏன் அரசிடம் அடிபணிந்துள்ளார் என தெரியவில்லை. ‘பத்திக்’ அமைச்சு தொடர்பில் கதைத்து புலம்பிக்கொண்டிருக்கின்றார். ராஜபக்ச கூட்டணியிலிருந்து நான் வெளியேறினேன். அமைச்சு பதவி தேடி ஓடவில்லை.

பற்றி எரியும் கப்பல் கடலில் மூழ்குவதுபோல இந்த அரசும் விரைவில் கவிழும். எனவே, இந்த அரசியிலிருந்து துணிகரமாக வெளியேறுங்கள். உங்களுக்கு ஆதரவு வழங்குவோம்.

அண்மையில்தான் கட்சி ஆரம்பித்தேன். பலர் இணைகின்றனர். எத்தடை வந்தாலும் முன்னோக்கி பயணிப்பேன். எனது பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. ஒரு கட்சி இல்லாவிட்டாலும் பதிவுசெய்யப்பட்ட பல கட்சிகள் உள்ளன.” – என்றார்.

Related Articles

Latest Articles