தனது மனைவியுடன் உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று இரவு (1) மித்தெனிய சதொஸ்மாதாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










