ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள பூங்கா ஒன்றின் மீது இடம்பெற்ற பீரங்கி தாக்குதலில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஈராக் மற்றும் துருக்கி இடையே இராஜதந்திர மோதல் ஒன்று வெடித்துள்ளது.
இதில் ஈராக்கிய சுற்றுலா பயணிகளே அதிகம் கொல்லப்பட்டிருப்பதோடு பலியானவர்களில் சிறுவர்களும் உள்ளனர். குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள் துருக்கி படை மீது குற்றம்சாட்டுகின்றனர். துருக்கிக்கான பதில் தூதுவரை ஈராக் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது. அதேபோன்று ஈராக்கிற்கான துருக்கிக் தூதுவரை அழைத்து மன்னிப்புக் கேட்கும்படி கோரியுள்ளது. ‘துருக்கி படையினர் ஈராக்கிய இறைமையை மோசமாக மீறியுள்ளனர்’ என்று ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதீமி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக துருக்கி குற்றம்சாட்டுகிறது.