ஒருசில நிமிடங்கள். கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. சில கட்டிடங்கள் தரைமட்டமாகின. உறக்கத்தில் இருந்த உயிர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. எங்கும் மரண ஓலம். பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சொல்லி அடங்காத துயர். இத்தனையும் நடந்தது துருக்கியில். துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், ஈராக், ருமேனியா, ஜோர்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. 1939ம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியைத் தாக்கிய மிக மோசமான பேரிழப்பு இது.
ஒரு சில நிமிடங்களில் துருக்கியை திருப்பிப் போட்டது. ஒரு நாடு நிலைகுலைந்தது. மீட்பு பணியில் உலக நாடுகளின் உதவியை துருக்கி கோரியது. நாடுகளின் உதவிகள் பறந்தன. கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் – ரஸ்ய போர் என்பவற்றால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டு, மீண்டுவரும் தருணத்தில் துருக்கியின் மீது இந்த அடி விழுந்தது. பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நாடுகள் போராடி வந்த நிலையிலும், துருக்கிக்கு அனைத்துத் திசைகளில் இருந்தும் உதவிக் கரம் கிடைத்தது.
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உடனடியாக உதவ முன்வந்த இந்தியா!
உலக நாடுகளிடம் துருக்கி உதவி கோரியதும் இந்தியா தனது மனிதாபிமானப் பணிகளை ஆரம்பித்தது. சில இடையூறுகளுகளைக் கடந்து இந்தியா இந்த உதவிகளை முன்னெடுக்க நேரிட்டது.
#Watch 🚨
Pakistan again denied it’s airspace to India , This time to a NDRF #relief flight to #EarthQuake affected Turkey.
Indian Airforce flight airborne from Hindon Airbase at 3:09 IST taken a long route to fly towards Türkey.#earthquakeinturkey #syriaearthquake pic.twitter.com/CAMDL0AIE1— Sajid Dar 🍁ساجد ڈار (@Beingsajiddarr) February 7, 2023
துருக்கிக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய என்.டி.ஆர்.எஃப் விமானம், துருக்கி செல்வதற்கு வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் மறுத்தது. இதனால் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் ஃபிரட் சுனெல், தனது நாட்டிற்கு நிதி, நிவாரணப் பொருட்களை வழங்குவதில் இந்திய அரசின் பெருந்தன்மைக்காக இந்தியாவை ‘தோஸ்த்’ என்று கூறியிருந்தது.
First Indian C17 flight with more than 50 search & rescue personnel, specially trained dog squads, drilling machines, relief material, medicines & other necessary utilities & equipment reaches #Turkey to provide #earthquake assistance, Indian foreign ministry said. #ArianaNews pic.twitter.com/MuLIPlww2a
— Ariana News (@ArianaNews_) February 7, 2023
துருக்கிக்கு உதவி அனுப்பியதற்காக இந்தியாவிற்கு ஃபிரட் சுனெல் நன்றி தெரிவித்ததோடு, தேவையில் உதவுகிற நண்பர் உண்மையில் நல்ல நண்பர்’ என்று கூறினார். இந்தியா வழங்கிய உதவிக்கு சமூக ஊடகங்களில் நன்றியும் தெரிவித்திருந்தார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள், தேவையான உபகரணங்களுடன், 100 பணியாளர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல், மீட்புப் பணிகளுக்காக பறக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் உடனடியாக அறிவித்தது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், துருக்கி தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அனுதாபத்தையும் மனிதாபிமான ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக ஒரு கூட்டத்தையும் நடத்தியது. மருத்துவக் குழுக்கள், மீட்பு குழுக்கள், நிவாரணப் பொருட்களுடன் துருக்கி குடியரசின் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் உடனடியாக அனுப்பப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களை உள்ளடக்கிய இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பறக்கத் தயாராக உள்ளன என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
மருத்துவக் குழுக்கள் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார்படுத்தப்பட்டது. துருக்கி அரசு, அங்காராவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள துணை தூதரக அலுவலகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்” என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
நிவாரணப் பொருட்கள் துருக்கியை சென்றடைந்தது. முதற்கட்டமாக 50இற்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள், துளையிடும் இயந்திரங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்கள் மற்றும் உபகரணங்களுடன் முதல் இந்திய C17 விமானம் மூலம் அடானா, டர்கியே சென்றடைந்தன.
இந்தியாவிற்கு துருக்கி நன்றி
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டுக்கு, தேவையான உதவிகளை செய்ததற்காக அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரிமுரளிதரன், டெல்லியில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு சென்று, பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான உதவிகள் செய்து தர உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, துருக்கியின் துாதர் பிராட் சனல் சார்பில், இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
MoS @MoS_MEA visited Embassy of Türkiye to express condolences on the devastation caused by today’s earthquakes.Conveyed PM @narendramodi’s message of sympathy & humanitarian support. Underscored readiness to send relief material,as well as NDRF & medical teams to assist Türkiye. pic.twitter.com/dFDkpqZtlh
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023