தேசிய அமைப்பாளர் பதவியை பஸில் ஏற்க மறுத்தது ஏன்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்றுமாறு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பஸில் ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.

இதனையடுத்தே கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடியது.

இதன்போது கட்சியில் வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவி நியமனத்துக்கான தேர்வு நடைபெற்றது. குறித்த பதவியை பஸில் ராஜபக்ச ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டு அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

2030 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே நாமல் ராஜபக்சவுக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles