வார்டுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்கும் HNB
இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB நாட்டிலுள்ள மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்காக அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு அறுவை சிகிச்சை உபகரணங்களையும் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கயும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அன்றாடம் பாரியளவு நோயாளர்களுக்கு நன்மையளிக்கும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவற்காக இந்த வேலைத்திட்டத்தின் மூலம் HNBக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
அதற்காக அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக தேசிய வைத்தியசாலைக்கு வழங்கியமை தொடர்பில் HNB மூலோபாய திட்டமிடல் தொடர்பான பிரதான முகாமையாளர், பிரியங்கா விஜேரத்ன, HNB பேண் தகைமை வர்த்தக பிரதானி, ஷனேல் பெரேரா மற்றும் HNB சமூக பொறுப்புகள் மற்றும் பேண் தகைமை தொடர்பான துணையாளர் வீ. திஷாரத்னம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB Chief Transformation Officer/Trustee HNB Sustainability Foundation திருமதி. சிரன்தி குரே, “தற்போது அனைத்து இலங்கையர்களும் பரவி வரும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்றனர்.
அதன்போது நாட்டிலுள்ள மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புகளுக்காக முக்கியத்துவம் வழங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சுகாதார ஊழியர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மிகவும் சிறந்தது.
அவர்களது சேவைகளுக்காக எமது நன்றிகளை அவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு அடையாளமாக இந்த அன்பளிப்பை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுத்தோம்.” என தெரிவித்தார்.
தொற்றுநோய் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நாட்டை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் HNBஇனால் நாட்டின் சுகாதார சேவைகளுக்காக பல்வேறு பங்களிப்புக்கள் செய்யப்பட்டதுடன் இந்த அர்ப்பணிப்புகளின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு வழங்கியமையை குறிப்பிட முடியும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரால் டொக்டர் குமார விக்ரமசிங்க, “கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகாதார துறையின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்க HNB நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்காக மிகவும் சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது.
வங்கி மூலம் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பாக எமது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல் நிறைந்த காலப்பகுதியில் சுகாதார சேவை வசதிகளை மேம்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்தார்.
இலங்கையின் விசாலமான போதனா வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை 3000 கட்டில்களுடன் காணப்படுவதுடன் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் சுகமடையாத நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்படுவார்கள்.
அத்தோடு கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய பீட பட்டதாரிகளுக்கும் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்காகவுமான பயிற்சி மத்திய நிலையமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(இடமிருந்து) மேற்பார்வை அதிகாரி, அஜித் உபநன்தன, தாதியர் அதிகாரி, எம்.எம். சுகந்தபால, அவசர சிகிச்சை தொடர்பான விசேட சேவை தாதி அதிகாரி ஏ.எஸ். சுரவீர, அவசர சிகிச்சை சேவைகள் தாதி அதிகாரி ஏ.டீ.ஈ. முனசிங்க, அவசர சிகிச்சை சேவைகள் பிரதிப் பணிப்பாளர் திஸ்ஸ ஜயவீர, இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் குமார விக்ரமசிங்க, HNB மூலோபாய திட்டமிடல் தொடர்பான பிரதான முகாமையாளர், பிரியங்க விஜேரத்ன, அவசர சிகிச்சைப் பிரிவு விசேட சேவைகள் தாதி அதிகாரி, சந்தியா கருணாதாஸ, HNB பேண் தகைமை வர்த்தக பிரதானி, ஷனேல் பெரேரா, HNB சமூக பொறுப்புணர்வு மற்றும் பேண் தகைமை தொடர்பான துணையாளர் வீ. திஷாரத்னம் மற்றும் தேசிய வைத்தியசாலையின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஸா ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.