‘தேயிலைக்கான உர மானியத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை’

தேயிலை கைத்தொழில் தற்பொழுது நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், தேயிலைக்கான உர மானிய முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கோரிக்கைவிடுத்தார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையைில் நடைபெற்ற பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உரத் தட்டுப்பாடு காரணமாக சிறு தேயிலை விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் இந்த மானியத்தை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Articles

Latest Articles