கம்பளை குறுந்துவத்தை மெதகொடயில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையில் இன்று (27) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த தொழிற்சாலையும் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகிவுள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்

இதன் போது குறித்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளரின் மகனும் ஊழியர் ஒருவருமே தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் கம்பளை மற்றும் குறுந்து வத்தை வைத்திய சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேற்படி தீவிபத்து குறித்து குறுந்துவத்தை பொலிஸாருக்கு அறிய வந்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து கண்டி தீயணைக்கும் படைபிரிவிற்கு அறிவித்துள்ளனர் எனினும் தீயணைக்கும் படையினர் ஸ்தலத்திற்கு வந்தடைவதற்குள் தொழிற்சாலை முற்றாக எரிந்து சாம்பாலாகிவுள்ளதாக தெரியவருகிறது

கம்பளை பிரதேசத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன
இதற்கு முன்னரும் அவைகளில் பல்வேறு தீ விபத்துக்கள் இடம் பெற்ற சந்தர்ப்பங்களிலும் கண்டியிலிருந்து தீயணைக்கும் படையினர் வந்து சேர்வதற்கு ஒரு மணித்தியாலயங்களுக்கு மேல் காலதாமாதம் ஆகின்றமையால் தீ விபத்து ஏற்படும் கட்டிடடம் முற்றாக எரிந்து சேதமாகிவிடுகின்றன
இதனால் கம்பளை பிரதேசத்தில் தீயணைக்கும் படைபிரிவொன்றை அமைக்கக் கோரி வர்த்தகர்கள் பொதுமக்களும் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை குறித்து பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
கம்பளை பிராந்தியற்திற்கு பொறுப்பான சிரேஷ்ட்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் ரட்னாயக்க குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய மேற்படி தீ விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
