” பலமான நாடாளுமன்றம் அமைந்துள்ளதால் தெருவில் இருந்துதான் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அந்தஅடிப்படையில் பொதுத்தேர்தலில் தோற்று தெருவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
மாற்றம் என்றார்கள், ஆனால் இந்த ஆட்சியின்கீழும் பழைய அணுகுமுறைதான் இடம்பெறுகின்றதுபோலும் எனவும் அவர் கூறினார்.
பதுளை பொலிஸில் நேற்று வாக்குமூலம் வழங்க வந்திருந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
” நவம்பர் 11 ஆம் திகதி நாம் அணிந்திருந்த ரீசெட்தான் பிரச்சினையாகியுள்ளது. நான் அணிந்திருந்த ரீசெட்டில் சிலிண்டர் சின்னம் இருக்கவில்லை. இலக்கம் 10 மட்டும்தான் இருந்தது. அது மெஸியின் ரீசெட். மெசியின் இலக்கம் 10 என்பது முழு உலகுக்கும் தெரியும்.
நாட்டில் இரு சட்டங்கள்தான் இன்னும் செயற்படுகின்றதுபோல் தெரிகின்றது.
நாடாளுமன்றத்தில் அல்ல தற்போது வீதியில்தான் அரசியல் உள்ளது. அந்தவகையில் வீதியில் இருந்து எமது பயணம் ஆரம்பமாகும்.
பொலிஸாருக்கு மேல் மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் வந்திருக்கக்கூடும். .”- என்றார்.