ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
ரோஹித அபேகுணவர்தன உட்பட மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தற்போதிருந்தே தயாராக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சிலர், கிராம மட்டத்தில் மொட்டு கட்சிக்கான அரசியல் நிலைவரம் சரியில்லை, பின்னடைவு ஏற்படும் எனக் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள நாமல், கிராம ஆட்சி மொட்டு கட்சி வசம்தான், உள்ளது, அதில் மாற்றம் ஏற்படவில்லை. தேசிய மக்கள் சக்தியால் கிராமங்களுக்கு ஆதிக்கம் செலுத்த முடியாது, எனவே, உள்ள ஆதரவை தக்க வைக்கும் பொருட்டு செயற்பட்டாலே போதும், வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.










