இனிய எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.










