” இந்நாட்டில் சோறு சாப்பிடும் மக்கள்தான் வாழ்கின்றனர், எனவே, அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். தேர்தலை பிற்போட அரசு முயற்சிக்கவில்லை.” – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. காரணத்தின் அடிப்படையிலேயே உள்ளாட்சிசபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.
அடுத்த தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என உறுதியாகக்கூறிக்கொள்கின்றேன்.
நாட்டில் புல் சாப்பிடுபவர்கள் அல்லர், சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர், எதிரணிகளின் அரசியல் நாடகம் மக்களுக்கு தெளிவாக புரியும். கிராம மட்டத்தில் தற்போது கூட்டங்களை நடத்திவருகின்றோம். எமது பலம் என்னவென்பதை ஜே.வி.பியினருக்கு அங்கு வந்து பார்க்கலாம்.” – என்றார்.










