தேர்தல் நெருங்கும்வேளைதான் வீதியை திறப்பீரா? சுமந்திரன் கேள்வி

தேர்தல் நெருங்கும்வேளைதான் வீதியை திறப்பீர்களா என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது சமூக ஊடக பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்துள்ளார்.

” கட்டுப்பாடுகளுடன் பலாலி வீதி திறக்கப்பட்டதை வரவேற்கின்றோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை. மாலை ஆறு மணியிலிருந்து காலை 5 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதி வழங்கியது.

ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை.” எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Latest Articles