தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஒத்திவைத்தது மொட்டு கட்சி!

அநுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” எமது கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இருந்தே ஆரம்பமாகும். அந்தவகையில் இம்முறையும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டம் தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் மார்ச் 10 மற்றும் 20 ஆம் திகதிக்குள் மேற்படி கூட்டத்தை அநுராதபுரத்தில் நிச்சயம் நடத்துவோம்.” எனவும் எஸ்.எம். சந்திரசேக குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles