நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 36,000 மெற்றிக் டன் பெற்றோல் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
