இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இவ்வெற்றியுடன் மூன்று போட்டிகளைக்கொண்ட ரி – 20 தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி நாளை இரவு 7 மணிக்கு தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.