தொடர் குடியிருப்பில் தீ – 3 வீடுகள் தீக்கிரை!

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட  தொடர் குடியிருப்பில் நேற்று இரவு  8.30 மணியளவில் மினசாரம் தடைப்பட்டிருந்த வேளையில் தொடர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அயலில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் தீ பரவியதால் 3 வீடுகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு  வீட்டு தளபாடங்கள் அனைத்தும் எரி்ந்து சேதமடைந்துள்ளன.

சுவிண்டன் தோட்ட இளைஞர்கள் மற்றும் பொது மக்களின் பாரிய முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை லுணுகலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு  தனராஜா

Related Articles

Latest Articles