தொடர்கிறது போராட்டம்!

“அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராகவுள்ளோம்.”

– இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான நேற்று (14.01) கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தின் பின் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்,

” தைப்பொங்கல். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாள். விவசாயத்துக்கு இன்றியமையாத சூரிய ஒளியை வழங்கிய சூரியனுக்கு (சூரியக் கடவுள்) நமது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக இந்த நாளை நாங்கள் கொண்டாடுகின்றோம். டிரம்பை வாழ்த்துகின்றோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டங்களைப் பெருக்குகின்றோம்.

அறுவடையில் முக்கிய பங்காற்றிய மழை, கால்நடைகள் மற்றும் பூமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர். இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தாய்மார்கள் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

தமிழர்களுக்கு இந்த மகத்தான நாளில், 2025 ஆங்கில புத்தாண்டையும் வரவேற்கின்றோம். எவ்வாறாயினும், இந்த நாள் ஒரு சோகமான மைல்கல்லையும் குறிக்கின்றது.

தமிழ் தாய்மார்கள் தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெறும் வரை இடைவிடாத போராட்டத்தின் 2886 ஆம் நாள் இன்று. வவுனியா நீதிமன்றத்துக்கு முன்பாக ஏ-9 வீதியில் நிற்கும் இந்த தைரியமான தாய்மார்கள் சத்தியம் மற்றும் நீதிக்கான கோரிக்கையைத் தொடர்ந்தும் முன்வைக்கின்றனர். தங்களின் அன்புக்குரியவர்களை வெளிக்கொணர்வதும், எதிர்கால இனப் படுகொலைகளைத் தடுப்பதும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஆதரவைப் பெறுவதும் தாய்மாரின் நோக்கம்.

நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பை வாழ்த்துகின்றோம். ‘அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது’ என்பது தமிழ்ப் பழமொழி. அதேபோல், அமெரிக்கா மற்றும் அதன் ஜனாதிபதியின் தலைமை இல்லாமல், உலகம் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ நகர முடியாது.

மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுதந்திர உலகின் தலைவர் டொனால்ட் டிரம்ப். அவரது வரவிருக்கும் காலத்தில், அமெரிக்காவின் தீர்க்கமான நடவடிக்கைகளால் உந்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உதாரணமாக பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடா தொடர்பான டிரம்பின் கடந்த மாத அறிக்கைகள், அவரது கவனம் இலங்கை உட்பட தெற்காசியாவை நோக்கி விரைவில் திரும்பக்கூடும் என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது.

உலகில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்ததுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் அமெரிக்கா தெளிவாக உள்ளது. சீனாவுக்கான ஆதரவு வெளிப்படையாகத் தெரிந்த இடங்களில், அரசியல் அல்லது கட்டமைப்பு மாற்றங்கள் பின்பற்றப்படலாம்.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தமிழர்களாகிய நாம் வரவேற்கின்றோம். அவரது நிர்வாகம் எங்களை அழைத்தால், வொஷிங்டனுக்குச் சென்று, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள், அரசியல் கைதிகள் மற்றும் நிலையான, பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தின் தேவை குறித்து விவாதித்து முடிவெடுக்கத் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் தமது பிள்ளைகளின் படங்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியவாறு கண்ணீர்மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles