அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள் இடம்பெறமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
எனவே, மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறு மாபெரும் தலைவரை நினைவுகூருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய வம்சாவளி மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 வது சிரார்த்த தினம் இன்று (30) நினைவு கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அதேபோல் மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே பிரார்த்தனையின் மூலமாக சிராத்த தினத்தை அனுஸ்டிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
