தொழிலாளர் தேசியசங்கத்தின் தோட்டக் கமிட்டி, இம்மாதம் முதலாம் திகதியுடன் கலைக்கப்பட்டதாக, அச்சங்கத்தின் பிரதிநிதிச் செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில்,
அண்மையில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகத்தர் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டத் தீர்மானத்துக்கு அமைவாகவே, சங்கத்தின் தோட்டக் கமிட்டி முற்று முழுதாகக் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விரைவில் புதிய கமிட்டி உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பேரளார் மாநாடு கூட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.