பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என்று நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக்குறிப்பிட்டார்.











