தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடையில் இருந்து மடக்கும்புர தோட்டம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது
அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கௌசல்யா
