வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட எனிக் கீழ் பிரிவில் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கும் தோட்ட உதவி பெண் முகாமையாளர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து குறித்த தோட்டத்தின் பெண் உதவி முகாமையாளர் தோட்டத் தொழிலாளி ஒருவரை தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்கப்பட்ட தொழிலாளி உடபுசல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து இராஜாங்க அமைச்சர் குறித்த விடயத்தை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உடபுசலாவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிடம்அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து எனிக்தோட்ட பெண் தோட்ட உதவி முகாமையாளர் சற்று முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.