மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறும், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் புஸல்லாவை நகரில் இன்று (18.06.2021) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலுகுமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் உடபதாளத்த பிரதேச சபை, கண்டி மாநகரசபை உட்பட மேலும் சில சபைகளின் உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் பங்கேற்றனர்.
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஏற்பாட்டுக்குழு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
