” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்னரே சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதுவும் இழுத்தடிப்புக்கு மத்தியிலேயே ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. அந்த ஆயிரம் ரூபாவை வைத்து என்ன செய்வது? எனவே, தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவது வழங்கப்பட வேண்டும்.” – என்றார் .










